2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘மாற்றுத் தலைமைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டால் சிந்திப்பேன்’

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஸன், எஸ். ஜெகநாதன்

தமிழர்களுக்கான மாற்றுத் தலைமைக்கான கோரிக்கை விடுக்கப்படும் நேரத்தில், அதுபற்றிச் சிந்திக்கவுள்ளதாக, வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய மாற்றுத் தலைமை குறித்து அண்மையில் அதிகம் பேசப்படும் நிலையிலும், மாற்றுத் தலைமையை ஏற்குமாறு விக்னேஸ்வரனை கோரப்படுவது குறித்து வினவியபோதே, மேற்கூறப்பட்ட கருத்தை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன், “அரசியல் ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம். இந்நிலையில், எங்களுக்குள் இருக்கும் எந்த தனிபட்ட குரோதம், முரண்பாடுகளை முன்வைத்து பிரிந்து கொள்வது எங்களுக்கே நஷ்டத்தை ஏற்படுத்தும். எந்தவித பிரிவினைக்கும் இடம் கொடுக்கக் கூடாது” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X