Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
துப்பாக்கிகளைப் பயன்டுத்தியதால், கடந்த காலங்களில் எமது மக்கள் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாற்று வழியை ஆராயுமாறு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகள் பல்வேறு திணைக்களங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை விடுவித்து, அடுத்த போகத்துக்கான பயிர்செய்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், அதற்காகவே குறித்த மீளாய்வுக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்வு கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, அமைச்சரால் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த முன்னாய்வுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குரங்குத் தொல்லைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, சிறிய ரகத் துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், பயிர்செய்கைகளுக்கு நாசம் விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்று சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட போதே, மேற்குறித்த கருத்தை தெரிவித்த அமைச்சர், மாற்று வழிகள் தொடர்பாக ஆராயுமாறு பணித்தார்.
15 minute ago
21 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
43 minute ago