Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
சொர்ணகுமார் சொரூபன் / 2018 நவம்பர் 28 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னின்று நடத்தியவரின் வீட்டின் மீது நள்ளிரவு இனந்தெரியாத கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
மாவீரர்நாளான நேற்று (27) இப்பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில், பருத்தித்துறை பொலிஸார் நிகழ்வு ஏற்பாட்டில் இருந்த மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அங்கிருந்து மக்களை விரட்டியடித்தனர்.
பதற்றமான சூழலில் பொலிஸாரின் அச்சுறுத்தலையும் தாண்டி குறித்த நேரத்தில் இப்பகுதியில் சுடரேற்றி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றது. இந்நிலையில் அதனை முன்னின்று நடத்தியவரின் வீடு நள்ளிரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக சம்பவம் இடம்பெற்ற நேரம் குறித்த நபர் அயலில் உள்ள தனது தாயாரின் வீட்டில் இருந்துள்ளார்.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (26) குறித்த நபரின் வீட்டுக்கு வாள்களுடன் சென்ற ஒருசிலர் தம்மை குற்றப்புலனாய்வாளர்கள் எனவும் கொழும்பு 4ஆம் மாடியில் இருந்து வந்தாகவும் கூறி இவ்வாறு மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தகூடாது என குறித்த நபரை அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .