Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 23 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதுக்கு முயற்சித்தமையும், தேர்தலின் போது புதுக்குடியிருப்பில் மக்களுக்கு உடற்பரிசோதனை செய்ததுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுகளுக்கு காரணம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுகளுக்கு வடக்கு மாகாண சபையின் செயற்பாடே காரணமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள கருத்து அர்த்தமற்றது.
அரசுக்கு ஆதரவு வழங்கியமையாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உடற்பரிசோதனை செய்யப்பட்டது.
இவை எல்லாம் தேர்தலில் வருகின்ற பாதிப்பு நிலைமைகள் என்பதைப் புரியாமல் ஆளை ஆள் விரலைக் காட்டினால், மற்ற விரல்கள் நான்கும் எங்களையே நோக்கும். அதனை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இலங்கை அரசை தொடர்ந்து ஆதரித்ததும், மோசமான தோல்வியை கொடுத்திருக்கின்றது என தெரிவித்தார்.
15 minute ago
15 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
28 minute ago
41 minute ago