Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 21 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் காட்டுயானை ஒன்று படையினரின் மின்சார இணைப்பில் சிக்குண்டு இன்று (21) காலை உயிரிழந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள 68 ஆவது படைப்பிரிவினர் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக மின்சார இணைப்பை வழங்கியுள்ளனர். இதில் சிக்குண்டு யானை உயிரிழந்துள்ளது.
யானையின் உடலை பரிசோதனை மேற்கொண்ட வடபிராந்திய வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவ உத்தியோகத்தர் பா.கிரிதரன், “யானை மின்சாரத்தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்துள்ளது. குறித்த யானை 35 அகவையுடையது. இது இன்னும் நீண்ட காலம் வாழக்கூடியது என்றும் வடக்கில் இவ்வாறான இன யானைகள் மூன்றையே காட்டில் கண்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .