2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி இருவர் பாதிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - மீசாலை பகுதியில், நேற்று (17) மாலை,  முதியவர்கள் இருவர் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர்.

மீசாலை வடக்கு - தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது 65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது 65) ஆகியோரே, இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த இரு முதியவர்களும் நேற்றைய தினம் மரத்துக்கடியில் உரையாடி கொண்டு இருந்த வேளையிலேயே, மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X