Princiya Dixci / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்வெட்டானது முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரையும் கடுமையாக பாதித்துள்ளது.
குறிப்பாக, வர்த்தக நிலையங்களில் குளீரூட்டியில் இருக்க வேண்டிய சில பொருள்கள் பழுதடைவதாகவும் மின்பிறப்பாக்கிகளை பாவிப்பதற்கும் எரிபொருள் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுகின்றமையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை விட பாடசாலை மாணவர்கள் கல்வி கற்பதற்கும் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறு மின்வெட்டானது முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .