2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 13 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.

கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் யூலி அலக்சன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் கடந்த 09 ஆம் திகதி மீன்பிடிப்பதுக்காக கடலுக்கு சென்றிருந்த நிலையில் கரை திரும்பவில்லை. எனினும், அவரது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன கரையொதுங்கின.

அதனையடுத்து கட்டைக்காடு மீனவர்கள் இணைந்து குறித்த மீனவரை கடலில் தேடிவந்தனர்.

இந்நிலையில், குறித்த மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .