Mayu / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பனை, தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டி வடக்கை சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது 54) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பனை தென்னை வள சங்கத்திற்கு தொழிலாளி சென்ற வேளை , முகாமையாளருடன் தர்க்கம் ஏற்பட்டதையடுத்து , தொழிலாளி மீது முகாமையாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
அதனையடுத்து வீடு திரும்பிய தொழிலாளி , சுகவீனமுற்ற நிலையில் 31ஆம் திகதி புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டுள்ளமையும் , அந்த முறிவுகளினால் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக நிமோனியா ஏற்பட்டு , உயிரிழப்பு சம்பவித்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
மேலும், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முகாமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
எம்.றொசாந்த்
12 minute ago
20 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
27 minute ago
36 minute ago