Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கும், வாடகை ரக்ஸிகளுக்கும் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து கட்டண மீற்றர் கட்டாயம் பொருத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், ரக்ஸிகள் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம், அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் முதலாவது கிலோ மீற்றருக்கு 70 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்துக்கான காத்திருத்தல் கட்டணமாக 2 ரூபாவும் அறவிட முடியும்.
இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5மணி வரை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்துக்கான காத்திருத்தல் கட்டணமாக 2 ரூபாவும் அறவிட முடியும்.
அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை சேவையில் ஈடுபடும் ரக்ஸிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்துக்கான காத்திருத்தல் கட்டணமாக 3 ரூபாவும் அறவிட முடியும்.
இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 5மணி வரை சேவையில் ஈடுபடும் ரக்ஸிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாவும், அடுத்த ஒவ்வொரு நூறு மீற்றருக்கும் 5 ரூபாவும், ஒவ்வொரு நிமிடத்துக்கான காத்திருத்தல் கட்டணமாக 4 ரூபாவும் அறவிட முடியும்.
இந்த கட்டண விபரங்கள் யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகனால் முச்சக்கரவண்டி மற்றும் ரக்ஸி சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago