2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

உயர் நீதிமன்றத்தின் பணிப்புரை காரணமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருப்பதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் காண்டீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், பேராசிரியர் ஒருவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பல்கலைக்கழகம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக, கலைப்பீட மாணவர் ஒன்றியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், மேற்படி ஒன்றியத்தின் குற்றச்சாட்டு தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளரைத் தொடர்புகொண்டு கேட்ட போதே, அவர் மேற்காண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X