Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 15 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன், எஸ்.என். நிபோஜன்
முறிகண்டி, கொக்காவில் பிரதேசங்களுக்கு இடையேயான புகையிரதக் கடவையிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம், இன்று (15) மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள குறித்த சடலம், நேற்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து காணாமல் போனவரின் சடலமாக இருக்கலாம் என்று, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி, நேற்று பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்திலிருந்து, மாங்குளம், கொக்காவில் பிரதேசங்களுக்கிடைப்பட்ட புகையிரதக் கடவையில், நபரொருவர் தவறி விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாங்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பின்னர் குறித்த நபரைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று, முறிகண்டி, கொக்காவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலம், காணாமல் போன நபருடையதாக இருக்கலாம் என்று, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago