Freelancer / 2023 செப்டெம்பர் 09 , பி.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் இன்றையதினம் (09) அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை அரிசி ஆலை வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டு, இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது, அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகி உள்ளன.
அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதா, அல்லது தீ வைக்கப்பட்டதா என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago