Editorial / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு, பொலிஸாரால் இன்று (12) விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்து நிறுத்தி, தமது மீன்பிடித் தொழிலைச் சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரி, கடந்த 2ஆம் திகதி முதல், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு முன்பாக, மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (12) காலை மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே, விசேட பாதுகாப்பு நலன் கருதி, மாவட்ட செயலகத்துக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கலந்துரையாடல் இடம்பெற்று வந்து சந்தர்ப்பத்தில், சுமார் ஆயிரம் மீனவர்கள் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago