Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
வன்னி இறுதிப் போரின் போது, உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உறவுகள் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூருவதுக்கு நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டு, கடந்த 18 ஆம் திகதி அமைக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாக உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இதன்போது, நினைவாலயத்தை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறு உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தை அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்ட இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது.
இதற்கமைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் நேற்றுடன் (25) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago