2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மூளைக் காய்ச்சலால் கிராம சேவகர் உயிரிழப்பு

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உடுப்பிட்டி வடக்கு ஜே/353 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர்.

குமாரசாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த கிராம சேவகர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மூளைக் காய்ச்சலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X