2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

மேயருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி. மணிவண்ணனுக்கு எதிராக, மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவர்,  இன்று (10) உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ரஜுவ்காந், கிருபாகரன் ஆகியோரே, இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை முதல், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சபை உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை, அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் மேயரின் அராஜக செயற்பாட்டை கண்டிததே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேயரின் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாகத் தரிவித்த அவ்விருவரும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காத விடத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .