Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியை கடந்தவேளை மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 10ஆம் திகதி கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக, பருத்தித்துறை வீதியை குறுக்கே கடந்தார். இதன்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.
கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த நாகராஜா இராஜபூவதி (வயது 68) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். R
42 minute ago
46 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
05 Mar 2026