2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

முக்கொம்பன் வீதி சீரின்மையால் போக்குவரத்து நெருக்கடி

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் கிராம மக்கள் வீதி சீரின்மையால் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால்,ஸ்கந்தபுரத்துக்கும் முக்கொம்பன் கிராமத்துக்குமிடையிலான வீதி சீரின்மையால் அக்கராயனிலிருந்து முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற இ.போ.ச பஸ் சேவை கடந்த இருபது நாட்களுக்கு மேலாக நடைபெறுவதில்லை.

இதன்காரணமாக, அக்கராயன் பிரதேச மருத்துவமனை,கிளிநொச்சி நகரம் ஆகியவற்றுக்கு செல்லும் முக்கொம்பன் கிராம மக்கள் தற்போது பூநகரி பத்தாம் கட்டை வழியாக பரந்தன் சென்று கிளிநொச்சி நகரை சென்றடைய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

முக்கொம்பன் கிராம மக்கள் மேற்படி வீதியை புனரமைத்துத்தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X