2025 ஜூலை 19, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் படுகாயம்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் புதன்கிழமை (06) இரவு முச்சக்கரவண்டியொன்று  குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி உட்பட நால்வர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

முச்சக்கரவண்டியில் வல்வெட்டித்துறை, கொற்றாவத்தையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குசென்று விட்டு மீண்டும்  திரும்பி வரும் வழியில் எதிரே நாயொன்று குறுக்கிட்டது.

இதன்போது, சாரதி சடுதியாக முச்சக்கரவண்டியினை திருப்ப முற்பட்டபோது, முச்சக்கரவண்டி குடை சாய்ந்து விபத்துக்குள்ளனாது.

சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான நால்வரும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X