2025 ஜூலை 19, சனிக்கிழமை

மாணவர்களை தாக்கிய நபருக்கு பிணை

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி சுன்னாகம் நகரப்பகுதியில் இரு மாணவர்களை பியர் போத்தலால் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் திங்கட்கிழமை (04) அனுமதியளித்தார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இரு குழுக்கள் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் குறித்த நபர், உயர் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களை பியர் போத்தலால் தாக்கியிருந்தார்.

இச் சம்பவத்தில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான குப்பிளான் மாசியப்புலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய குறித்த சந்தேக நபர் ஒரு மாதத்தின் பின்னர் சட்டத்தரணி ஒருவர் மூலம் நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணி மன்றில் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கடும் நிபந்தனையின் அடிப்படையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X