2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாணவர்களை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்: ஒருவருக்கு பிணை

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் நகரப்பகுதியில், பாடசாலை மாணவர்;கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும், நான்காவது சந்தேகநபரை எச்சரித்த நீதவான், அவரை 60,000 ரூபாய் ஆள்பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணர்;களான கண்ணதாசன் கோணேஸ்வரன் (வயது 18), பத்தசீலன் விதுஸன் (வயது 18) ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) சந்தேகநபர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மானிப்பாய், மல்லாகம் பகுதிகளில் வைத்து திங்கட்கிழமை (21) இரவு சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .