Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- குணசேகரன் சுரேன்
மாணவர்களின் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள் குறித்து பெற்றோர்; வீடுகளில் இருந்தவாறே அறிந்துகொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வகையில் முறையொன்றை கொக்குவில் இந்துக் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது.
பெற்றோருக்கு மாணவர் சார்பாக பதிவு பெயர் மற்றும் கடவுச்சொல் என்பன வழங்கப்படும். அதனைக் கொண்டு, பாடசாலையின் இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் பிள்ளை அன்றைய தினம் பாடசாலைக்கு சென்றுள்ளாரா? என்பதை அவதானிக்கலாம்.
இந்த முறையின் கீழ் பதிவுகளை மேற்கொள்ளும் அனைத்து பெற்றோர்களின் அலைபேசிக்கும் மாணவர் பாடசாலைக்கு வருகை தந்தவுடன் குறுந்தகவல் சென்றடையும்.
அத்துடன், தங்கள் பிள்ளைகளின் நிலை பற்றி அறிந்துகொள்ள பிள்ளையின் வகுப்பாசியரின் பதிவுக்குச் சென்று மாணவரின் பெயரைக் குறிப்பிட்டு கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவரின் பதிவுக்கு ஆசிரியர் சென்று, மாணவனின் குறைபாடுகள், அவரது நடத்தைப் பிழைகள் தொடர்பில் பதிவிடமுடியும். இதனை பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
வீட்டில் இருந்தவாறே மாணவர்களின் விவரங்களை பெற்றோர் அறிந்துகொள்ளும் வகையில் இந்த முறைமையானது நடைமுறைப்படுத்தப்படுவதாக நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த 14ஆம் திகதி இந்த முறையின் அங்குரார்ப்பணம் நடைபெற்றுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் இந்த முறையை முழுமையாகச் செயற்படத் தொடங்கும் எனவும் நிர்வாகத்தால் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
12 minute ago
20 minute ago