Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 26 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழைமை (19) கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவத்தினை மூடி மறைப்பதற்கு முயற்சி செய்த மேலும் நான்கு ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக, பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து, சிறுமியின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கு கல்வி கற்கும் 12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையடுத்து, பெற்றோர் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் வினாவியபோது, இந்த விடயத்தை இத்துடன் விடுமாறும், அதுவே நல்லது எனவும் வெளியில் தெரியப்படுத்தவேண்டாம் எனவும் அதிபர் மற்றும் அங்கிருந்த 3 ஆசிரியைகள் பெற்றோர்களை அச்சுறுத்தும் பாணியில் கூறியுள்ளனர்.
இந்த விடயத்தை அறிந்த பிரதேசவாசியொருவர், சாவகச்சேரி சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, நடவடிக்கை எடுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இச்சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த 3 ஆசிரியைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago