2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மோதல் விவகாரம்: யாழ். வணிகபீட மாணவர்கள் 15 பேர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பல்கலைகழகத்தில் 3ஆம் வருட வணிகபீடமாண இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (19) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், திலங்க சுமிந்த பண்டாரா (வயது 23), டி.எஸ்.ஜே.வர்ணகுலசூரிய (வயது 23), எஸ்.பீ.வீ.ஏக்கநாயக்க (வயது 23) சூரிய குலகே சுமித் மாவத்த (வயது 23) ஆகிய நால்வர், யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டு மாணவர்களும் 3ம் ஆண்டு 1ம் அரையாண்டு மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்று வந்த முறுகல் நிலை ஞாயிற்றுக்கிழமை (19) கைகலப்பாக மாறியது.

இதில் 3ம் ஆண்டு 1ம் அரையாண்டு மாணவர்கள் தங்கியிருந்த திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு சென்ற 3ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டு மாணவர்கள் கைகல் பொல்லுகள் சகிதம் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் 15 மாணவர்களை நேற்று (20) சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். அவர்கள் அணைவரும் யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அவர்கள் முன்னிலையில் முற்படுத்திய போது 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்த நீதிவான், குறித்த 15 பேரும் தாங்கள் பல்கலைகழக மாணவர்கள் தான் என்பதனை பதிவாளர் ஊடாக உறுதிப்படுத்திய கடிதத்தினை நீதிமன்றுக்கு சமர்பிக்க கட்டளையிட்டார்.

அத்துடன்,  எதிர்வரும் வழக்கு தவணையான மார்ச் 17ஆம் திகதி முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட பீடாதிபதியினை மன்றில் முன்னிலையாக்குமாறு நீதிவான் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X