Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன், க.அகரன்
'புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத மர்மமான நோய்த் தாக்கங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்து வருவதாக, அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இது தொடர்பில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை அண்மையில் நடத்தியுள்ளார்.
இதன்போது, அண்மைக் காலமாக உயிரிழக்கும், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'அண்மைக் காலமாக முன்னாள் போராளிகள், மர்மான நோய்தாக்கத்தினால் மரணமடைவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுதொடர்பில் வடமாகாண சகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் கடந்தவாரம் கலந்துரையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இவ்வாறாக புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை செயற்றிட்டமொன்றை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
மிக விரைவில், இவ்வாறான விசேட மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பிப்பது தொடர்பில் துறைசார் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளோம். அக்கலந்துரையாடலின் பின்னர், எவ்வாறான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படமென அறிவிக்கப்படும்' என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago