Niroshini / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பது உண்மை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இது தீர்க்கப்படவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நீர்வேலியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கூட்டமைப்புக்குள் இருக்கும் 4 கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டும். அதன் பொறுப்பு தலைவரைச் சார்ந்தது.
பேச்சுவார்த்தையின் மூலம் கூட்டமைப்பின் சகல பிரச்சினை பற்றியும் பேசப்படவேண்டும்.
மேலும்,கூட்டமைப்பிலுள்ள அனைவருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். தனியே ஒரிருவரின் தீர்மானங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கக்கூடாது என்றார்.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago