Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்துக்கான பருவமழை பொய்த்ததால் மார்ச் மாதம் முதல் குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்படலாம் என யாழ். மாவட்டச் செயலாயர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட விவசாயக்குழு கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட செயலாயர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றிய மாவட்டச் செயலாளர், 'எமக்கு நிலத்தடி நீர்வளமே நீர் ஆதாரம். இம்முறை பருவமழை பொய்த்ததால் மார்ச் மாதம் முதல் குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்படலாம்.
விவசாயத்துக்கு பயன்படுத்தும் நீரின் அளவையும் குறைக்க வேண்டியுள்ளமையினால் அதற்கேற்ற பயிர்களை பயிரிடவேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் தமது பங்களிப்பினை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் துறை சார் திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் விவசாயக் காப்புறுதி, வங்கிக்கடன், தென்னை மற்றும் பனை அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சிகள் நீர்ப்பாசனம் விதை உற்பத்தி எதிர்வரும் காலங்களில் பயிரிடவேண்டிய பயிர்கள் மற்றும் இயற்கை முறையில் விளைச்சலை அதிகப்படுத்தக் கூடிய உத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
25 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago