2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்

Niroshini   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 06ஆம் திகதி, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலவசமாக தாலி, பட்டுப்புடவைகள், வேட்டிகள், வாழ்வதார உதவி மற்றும்  வீட்டுத்தளபாடங்கள் என்பன திருமணத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், திருமண செலவுகளையும் இராஜமாணிக்க திருமண மண்ட நிர்வாகத்தினர் ஏற்கவுள்ளனர்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமது விண்ணப்ப படிவங்கயை பதிவுத்தபாலில் தலைவர், இராஜமாணிக்கம் கல்யாணமண்டபம், பிரதான வீதி, அச்சுவேலி என்ற முகவரிக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியவாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X