2025 ஜூலை 19, சனிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் முச்சக்கரவண்டிகள் சேவையிலீடுபட இடையூறு

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, முழங்காவில், நாச்சிக்குடா பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் இருவர், தங்களுடைய முச்சக்கரவண்டிகளை முழங்காவில் பிள்ளையார் ஆலயப்பகுதி, நாச்சிக்குடா சந்திப் பகுதியில் தரித்து நின்று சேவையிலீடுபட முழங்காவில் நாச்சிக்குடா முச்சக்கர வண்டிச்சங்கத்தினர் அனுமதி தர மறுத்து வருவதாக பூநகரி பிரதேச செயலாளரிடம் இருவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இரு மாற்றுத்திறனாளிகளும் தவணையடிப்படையில் முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்து சேவையில் ஈடுபட முயற்சிகள் மேற்கொண்டபோது மேற்படி இரு சந்திகளிலுமிருந்தும் பணியிலீடுபட முடியாதென முச்சக்கர வண்டிச்சங்கத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து தாங்கள் பணியிலீடுபட பூநகரிப் பிரதேச செயலாளர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் மாற்றுத்திறனாளிகள் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பூநகரிப் பிரதேச செயலர் சந்திரன் கிருஸ்னேந்திரனிடம் கேட்டபோது,

நாச்சிக்குடா பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி சங்கம் பதிவுசெய்யப்பட்ட சங்கமாகவிருந்தால் அச்சங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாட வேண்டும். இல்லையேல் மாவட்டச் செயலாளருடன் இதுபற்றி கதைத்து மாற்றுத்திறனாளிகள் இருவருக்குமான முடிவுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X