2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் அதிக சிறுவர் தொழிலாளர்கள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலை செல்லாத, பாடசாலைகளில் இருந்;து இடைவிலகிய மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படும் சிறுவர்கள், தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏ-9, வீதி மாங்குளம் பகுதியிலுள்ள உணவகங்கள் சிலவற்றில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்;தப்பட்டுள்ளனர்.

இதனைவிட கட்டடவேலைகள், சட்டவிரோத மணல் அகழ்வுகள், மரங்கள் வெட்டுதல் போன்;ற செயற்பாடுகளுக்கு சிறுவர்கள் தொழிலாளர்களாக பயன்;படுத்தப்பட்டு அவர்களது உழைப்புக்கள் உறிஞ்சப்படுகின்றன.

சில குடும்பங்கள் தமது குடும்ப வருமானத்துக்காக இவ்வாறு அவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறை கொள்ளாது இவ்வாறு தொழிலுக்காக அனுப்பி வருகின்றனர்.

மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாகவும் கல்வியை இடைநிறுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எனவே, இது சார்ந்த அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X