Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 15 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார.;
இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனை விடுவிக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாம் ஏற்கெனவே வலியிறுத்தியுள்ளோம்.
இந்த நில விடுவிப்புக்காக நாம் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். எனினும், இன்னமும் முழுமையாக விடுவிக்கபடவில்லை. இப்போது தான் பகுதி பகுதியாக விடுவிக்கின்றனர். இவை முழுமையாக விடுவிக்கபடவேண்டும்.
குறிப்பாக இந்த ஆலயம் அமைந்துள்ள இடமும் இன்னமும் விடுவிக்கபடவில்லை. எனவே, இன்றய வருகையை ஒரு அர்த்தமானதாக அமைத்து ஏற்கெனவே எமக்கு அழிக்கபட்ட உறுதி மொழிக்கு அமைவாக இந்த நிலங்கள் விடுவிக்கபடவேண்டும்.
இதனை நேரில் தெரியபடுத்தவே இப்பகுதியில் இடம்பெறும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டேன்.
இதனைத் தொடர்ந்து இடம்பெறும் ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றார்.
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
4 hours ago