2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முஸ்லிம்களின் நலன் தொடர்பில் கருத்துப்பரிமாறல் நிகழ்வு

George   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக கருத்துப் பரிமாறும் செயலமர்வு, எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கண்டி போரம், அக்குரணை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து இந்தக் கருத்துப் பரிமாற்றத்தை நடத்தவுள்ளனர்.

யாழ்ப்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்ட தங்கள் ஆலோசனைகளை வழங்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X