2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யானைத் தந்தங்கள் மீட்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில், யானைத் தந்தங்களுடன் மூன்று பேர், நேற்று  (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து மூன்று யானைத் தந்தங்கள், விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, பூவரசங்குளம், குருக்களூர் புதுக்குளம் பகுதியில், யானைத் தந்தங்களைச் சிலர் வைத்திருப்பது தொடர்பில், விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர், 3 அடி தொடக்கம் 5 அடி வரையிலான 25 கிலோகிராம் எடையுடைய மூன்று யானைத் தந்தங்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களுடன், வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .