Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ், டி.விஜித்தா
யாழ்ப்பாணத்தின் இரு வேறுப் பகுதிகளில் இருந்து, இன்று (06), 110 கிலோகிராம் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டைமானாறு கடற்கரைப் பகுதியிலும் இளவாலை - மாதகல் பகுதியிலுமே, இந்தக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டைமானாறு கடற்கரைப் பகுதியில் வைத்து, கை மாற்றலுக்குத் தயாராக இருந்த நூறு கிலோகிராம் கஞ்சா பொதிகள், சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால், இன்று (06) அதிகாலை 4.30 மணிக்குக் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் பலாலியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், தொண்டமனாறு சிறுவர் பூங்காவுக்கு கடத்துவதற்கு முற்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, இளவாலை - மாதகல் பகுதியில், 10 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மைய நாள்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago