Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர், ஊர்காவற்துறையில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம், யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் குருநகர் சின்னக்கடை சந்தை பகுதி ஆகிய மூன்று இடங்களிலும் அண்மைய நாள்களில் சைக்கிள்கள் திருட்டுப் போயின.
எனினும், ஒருவர் மாத்திரமே தனது சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை களவாடிய பின்னர் ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியில் தலைமறைவாகும் இருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்க்கப்பெற்றது.
அங்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் 37 மற்றும் 38 வயதுடைய இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்கள் இருவரும் யாழில் திருடிய 03 சைக்கிள்களை மீட்டனர்.
கைது செய்த இருவரையும் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மூன்று சைக்கிள்களையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் பரவலாக துவிச்சக்கர வண்டி களவுகள் அதிகரித்துள்ளன. அவை தொடர்பில் உரிமையாளர்களால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படாமையால் பொலிஸாரினால் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.
எனவே, முறைப்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக திருடர்களை பிடிக்க முடியும் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago