2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யாழில் மைத்துனரை கொலை செய்த மூவர் கைது

Editorial   / 2020 மே 04 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் கூறினர்.

நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.

அவரது மைத்துனர்கள் மூவரே வீடு புகுந்து உயிரிழந்தவரை வாளால் வெட்டியதாக விசாரணைகளில் தெரிவிக்ககப்பட்டது.

இருதரப்புக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதுடன், சகோதரர்கள் மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டார். இதனையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பில் உள்ளனர்.

அத்தோடு உயிரிழந்தவரின் மனைவியும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறு சாவகச்சேரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X