Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா
சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, “கிராமத்துக்கான தகவல் உரிமை” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த விசேட நடமாடும் சேவை, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றது.
இதில், நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் திலகா ஜெயசுந்த பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் இயக்குநர் சுதர்ஷன குணவர்தன, நிதி மற்றும் ஊடக அமைச்சின் பிரதிச் செயலாளர் சுதர்மா குணரட்ண, தேசிய ஊடக வலையத்தின் இயக்குநர் ஜெகத் லியனராசாச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் கடந்த வருடம் சட்டமாக அமுலாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்களை, கிராம மட்டத்தில் உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளும் விதமாக, இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.
இதன்போது, உண்மையானத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல், ஊழலை தடுத்தல், காணி தொடர்பான விவரங்களைப் பெற்றுக்கொள்ளுதல், காணாமற் போனவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இறந்தவர்களின் விவரங்களைச் சமூக மட்டத்தில் உள்ளிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுராம், சட்டத்தரணி.கே.ஐங்கரன் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீப் வீரசிங்க ஆகியோர் விளக்கங்களை வழங்கினர்.
3 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
1 hours ago