2025 மே 07, புதன்கிழமை

யாழில் விடுதி முற்றுகை; அறுவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 25 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதியொன்று முற்றுகையிடப்பட்டு, இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸா, நீதிமன்றின் அனுமதி பெற்று, இன்று (25) முன்னெடுத்த முற்றுகையின் போதே, இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

“குறித்த விடுதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அது தொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பெறப்பட்டது.

 “குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21, 24 வயது இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர். இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர். ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X