2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழில் வெடிகுண்டுகளுடன் இருவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 22 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி குண்டுகளில் இருந்து வெடிமருந்துகளை சேகரித்து டைனமற் தயாரிப்பவர்களிற்கு விற்பனை செய்யும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவரே நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .