2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 07 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் நேற்றையதினம் (06) வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X