2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழுக்கு சஜித் விஜயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ, குடாநாட்டின்  பல இடங்களுக்கும் சென்று, பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதற்கமைய, முதலாவதாக யாழ். பிரதான வீதியிலுள்ள யாழ். சென் மார்டின் தேவாலயத்துக்குச் சென்று, அந்த ஆலய புனரமைப்பு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்கான புனரமைப்பு பணிகளையும் புனரமைப்பதற்கான அடிக்கல்லையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், அரச அதிபர் வேதநாயகம் மற்றும் மதகுருமார்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து வீடமைப்புத் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்ததுடன், ஏற்கெனவே அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்களையும் பொது மக்களிடம் கையளித்துள்ளார்.  அத்தோடு முன்பள்ளியொன்றையும் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X