Freelancer / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் காரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றினை தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்துவிட்டு, மின்சாரம் செலுத்தினார். இதன்போது மின்சாரம் அவர்மீது பாய்ந்தது.
இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. R
7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago