2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

முகக் கவசங்களுக்கு அரசாங்கம் நிர்ணய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும், முகக் கவசங்களுக்கு யாழ்ப்பாணத்தில் தட்டுப்பாடு காணப்படுவதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முகக் கவசங்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்டப் பின்னர் மக்கள் முகக் கவசங்களை முண்டியடித்துக் கொள்வனவு செய்யத்தொடங்கியதையடுத்து, அதன் விலை கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து, அரசாங்கம் முகக் கவசங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது.

இருப்பினும், முகக் கவசங்களுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. மருந்தகங்களில் முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கட்டடப் பணியின் போது பயன்படுத்தப்படும்  இரும்பகங்களில் விற்பனை செய்ப்படும் முகக் கவசங்களை கொள்வனவு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X