2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மாயம்

Freelancer   / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

யாழ். பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று மதியம் ஒரு படகில் பயணித்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.

கடலில் இறங்கியவரை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. அவரை காப்பாற்ற இறங்கியவரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகில் இருந்த ஒருவர் மட்டுமே பள்ளிமுனை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடலில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவத்தில் காணாமல் போனவர்கள் பருத்தித்துறையை சேர்ந்த தர்சன் மற்றும் செந்தூரன் எனவும் உயிர் தப்பியவர் ஜெரோம் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த பள்ளிமுனை கடல் பகுதியில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட ஆற்று நீரோட்டங்கள் இருப்பதாகவும் இதில்  ஏதாவது ஒரு நீரோட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று மன்னார் கடற்தொழில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .