2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடி: ’தற்போதே வழமைக்குத் திரும்பியுள்ளது’

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடியானது, தற்போதே வழமை நிலைமைக்குத் திரும்புவதாக, மாவட்ட நீரியல் வளத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்னர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாளொன்றுக்கு ச் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமுக்குக் குறையாத அளவில் கடல் உற்பத்திகள் கிடைக்கப்பெற்றன. இருப்பினும், ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில், 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் கிலோகிராம் உற்பத்தியைக் கூட எட்டமுடியாத நிலைமை காணப்பட்டது.

தற்போது, நாடு வழமைக்கும் திரும்பியதைத் தொடர்ந்து, நாளொன்றுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமைத் தாண்டிய உற்பத்தி கிடைக்கும் நிலையில், 40 ஆயிரம் கிலோகிராமுக்கும் அதிகளவான கடல் உற்பத்தி ஏற்றுமதியும் செய்யப்படுவதாக, அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X