Princiya Dixci / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த இரு நாள்களாகக் கடும் காற்று மற்றும் பலத்த மழையின் தாக்கத்தின் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில், 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு, உரிய திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025