Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 பெப்ரவரி 16 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தமது நெறிப்படுத்தல்கள் இல்லாமையும் ஒரு காரணம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு எங்களுடைய இளைஞர்களைப் பலரும் குறை கூறுகின்றனர்.
மேலும், இந்த நிகழ்வில் இளைஞர்கள் சிலர் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் அறிந்து கொண்டேன்.
நிகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நானும் அதனை பார்த்து இருக்க வேண்டும். நானும் அது தொடர்பில் கரிசனை இல்லாமல் இருந்து விட்டேன்.
இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுமாக இருந்தால் , மக்கள் பிரச்சனைகள் இன்றி சந்தோசமாக நிகழ்வுகளைக் கண்டு களிக்க கூடியவாறான ஏற்பாடுகளைச் செய்வோம் எனத் தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .