2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

யாழ்.இளைஞன் கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக ஜோர்தானுக்குத் தப்பிச் செல்வதற்காக அவர் இன்று (03) அதிகாலை 03.30 மணியளவில் எயார் அரேபியா விமானமான ஜி.-9501 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஏர் அரேபியா விமான சேவை அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக வந்த அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை ஆய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதால் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X