2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ். இளைஞர்களின் புதிய பயணம் ஆரம்பம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர்.

குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .